அரசியல்
குருந்தூர் மலையை பிக்குவுக்கும், விகாரைக்கும் வழங்க முயற்சி!


” குருந்தூர் மலையில் உள்ள காணியை அடாத்தாக அளந்து, அதனை பிக்குவுக்கும், விகாரைக்கும் வழங்குவதற்கு தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முயற்சிக்கின்றார். இதனை தடுப்பதற்கு உங்கள் பேரவை நடவடிக்கை எடுக்குமா?”
இவ்வாறு அரசாங்கத்திடம் இன்று கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தேசிய பேரவை அமைப்பது தொடர்பான பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் துறைசார் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுடன் நானும், சார்ள்ஸ் எம்.பியும் இன்று பேச்சு நடத்தினோம். காணி அளவீடு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறினார். தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு அழைப்பை ஏற்படுத்திக்கொடுத்தோம். அளவீட்டு பணியை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்தார். அந்த பணிப்புரை எடுபடுமா என்பதை நாளைவரை பொறுத்திருந்து பார்ப்போம். ” – என்றார்.
அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு திராணியற்ற இந்த அரசாங்கம், பேரவை கொண்டு வந்து என்ன செய்ய போகின்றது, இதனால் எதுவும் நடக்காது – எனவும் சிறிதரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.