அரசியல்
தேசிய பேரவை! – தீர்மானம் நிறைவேற்றம்


நாடாளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள “தேசிய பேரவை” என்ற பெயரிலான நாடாளுமன்ற குழு தொடர்பான தீர்மானம் இன்று (20) நிறைவேற்றப்பட்டது.
இத் தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
“தேசிய பேரவை” என்ற பெயரிலான நாடாளுமன்ற குழுவின் தலைவர் பதவி சபாநாயகருக்கு வழங்கப்படவிருப்பதுடன், இதன் உறுப்பினர்களாகப் பிரதமர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் முதற்கோலாசான் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களால் தீர்மானிக்கப்பட்டவாறு இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து ஒன்பதாவது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முப்பந்தைந்துக்கும் (35) மேற்படாதோர் உறுப்பினர்களாகக் காணப்படுவர்.