அரசியல்
அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை! – மைத்திரி மழுப்பல்


கட்சியின் முடிவுக்கு கட்டுப்படாமல் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட எம்.பிக்களுக்கு எதிராக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு மழுப்பல் போக்கில் பதிலளித்துள்ளார் கட்சி தலைவரான மைத்திரிபால சிறிசேன.
சர்வக்கட்சி அரசாங்கம் அமையும்வரை அமைச்சு பதவிகள் எதையும் ஏற்பதில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது.
எனினும், அந்த முடிவை கடாசித்தள்ளிவிட்டு, கட்சியின் 8 எம்.பிக்கள் இதுவரை அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளை பொறுப்பேற்றுள்ளனர். இவர்களில் சாந்த பண்டார, சுரேன் ராகவன் ஆகிய இருவருக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இது தொடர்பில் கட்சித் தலைவரான மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், ” ஒழுக்காற்று நடவடிக்கையைவிடவும் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வை தேடுவதே முக்கியத்துவம்மிக்க விடயமாகும்.” – என கூறி சமாளித்தார்.