யாழ்ப்பாணம் ஆறுகால்மடம், ஆனைக்கோட்டை பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடமிருந்து 50 லீற்றர் கோடா,, 8 லிட்டர் கசிப்பு மட்டும் 3 வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவரிடம் இருந்து கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன
கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment