அரசியல்
உடன் பொதுத்தேர்தல்! – ஜே.வி.பி. வலியுறுத்து


” நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு, உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,
” தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை. எனினும், ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே ,உடன் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்றார்.