அரசியல்
உடன் தேர்தலை நடத்தவும் – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து
” நாட்டை மீட்பதைவிடவும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதே ஆட்சியாளர்களின் இலக்காக இருக்கின்றது. எனவே, நாடாளுமன்றத்தை கலைத்து உடன் தேர்தலை நடத்தவும்.”
இவ்வாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியவை வருமாறு,
” விவசாயிகள், மீனவர்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நாட்டை பொருளாதார ரீதியில் மீட்பதைவிட, அதிகாரம் குறித்த ஆளுங்கட்சி அதிகம் சிந்திக்கின்றது. அதனால்தான் இருப்பை தக்க வைத்துக்கொள்ள மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறுகியதொரு அமைச்சரவையுடன் நாட்டை மீட்பதற்கான திட்டங்களை வகுக்கலாம். ஆனால் அதற்கான எண்ணம் இந்த அரசாங்கத்திடம் இல்லை. எனவே, நாடாளுமன்றத்தை கலைத்து, மக்கள் ஆணையுடன் புதியதொரு அரசாங்கம் உதயமாக, தற்போதைய ஆளுந்தரப்பு இடமளிக்க வேண்டும். .தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login