” புலிகளிடமிருந்து மஹிந்த ராஜபக்சவே அன்று நாட்டை பாதுகாத்தார். அதேபோல நாட்டில் அண்மையில் தோற்றம்பெற்ற (போராட்டம்) பயங்கரவாதிகளிடம் இருந்து ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை பாதுகாத்தார்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
” ஜனாதிபதியின் வீட்டையும் எரித்தனர், எனது வீட்டையும் கொளுத்தினர். இந்த செயலை அரச விரோத சூழ்ச்சியாகக் கருதி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். தற்போதைய ஜனாதிபதியால்தான் எம்மால் சுதந்திரமாக நடமாட முடிகின்றது.
ரணில் தொடர்பில் விம்பமொன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி அந்த ரணில் அல்லர். அவர் சிறப்பானவர். அந்த நம்பிக்கை உள்ளது.” – எனவும் குறிப்பிட்டார் எஸ்.எம். சந்திரசேன.
#SriLankaNews
Leave a comment