gota 3
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்த பெண்கள் கைது!

Share

ஜனாதிபதிக்குரிய உத்தியோகபூர்வ ஆசனத்தில் அமர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 49, 55 வயதுடையவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

மொரட்டுவைப் பிரதேசத்தில் இருவரும் இணைந்து வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருவதாகவும் பொலிஸர்ர் தெரிவித்துள்ளனர்.கடந்த ஜூலை 09ம் திகதி ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் பரவிய புகைப்படங்களைக் கொண்டு இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையில் அத்துமீறி நுழைந்தமை, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் இரண்டு பேரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...