முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக தலையிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடம் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவிக்கையில்
இந்தியாவில் தற்போது முட்டை ஒன்றின் விற்பனை விலை சுமார் 18 ரூபாவாக உள்ளது மேலும் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்து இந்த நாட்டில் ஒரு முட்டையை 20 ரூபாய்க்கு வழங்குவது மிகவும் எளிதானது.
தற்போது ஒரு முட்டையின் விலை 58, 60, 65 ரூபாயாக உள்ளதாகவும், இதனை நியாயமாக விலையில் விற்காமல் விற்பனையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆளுக்கு ஒரு விலையில் விற்று நுகர்வோர் சுரண்டப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
பொதுவாக ஒரு முட்டை உற்பத்தி செய்ய ஏழு மாதங்கள் ஆகும் எனவும், முட்டையை இறக்குமதி செய்து, முட்டையின் விலை கட்டுபடியாகும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் தொழிற்சங்கம் கோரிக்கை விடுப்பதாகவும் சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
 
 
Leave a comment