பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவைஇந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவிக்கையில்,
சுமார் 720,000 திரிபோஷா பொதிகளை நிறுவனம் தற்போது தயாரித்துள்ளது. இவற்றை சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சில வாரங்களில் குழந்தைகளுக்கு தேவையான திரிபோஷாவை உற்பத்தி செய்ய முடியும் – என்றார்.
#SriLankaNews
Leave a comment