767676
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் எரிபொருள் வரிசையில் நிற்கும் மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாக திருட்டுக்கள் அதிகரிப்பு!

Share

யாழில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் விடப்படும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து அதன் உதிரி பாகங்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருள் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வரிசையில் விடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றின் முன் பகுதியின் பாகம் களவாடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் விடப்பட்ட “ஜப்பான் 200” ரக மோட்டார் சைக்கிளின் ஒரு பக்கம் பாகம் களவாடப்பட்டு இருந்தது. அதன் பெறுமதி 12 ஆயிரத்திற்கும் அதிகம் என உரிமையாளர் தெரிவித்து இருந்தார்.

இவ்வாறாக வரிசைகளில் இரவு வேளைகளில் விடப்படும் மோட்டார் சைக்கிள்களின் , பக்க கண்ணாடிகள் , சிக்கனல்கள் , கோர்ன் உள்ளிட்ட உதிரிபாகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...