lakshman kiriella
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்கள் ஆணையை பெற்ற அரசே நாட்டுக்கு தேவை!

Share

” மக்கள் ஆணையை பெற்ற புதிய அரசே நாட்டுக்கு தேவை. அதனை நோக்கி பயணிப்பதற்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அவசரகால சட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, எதிரணி பிரதம கொறடாவான லஷ்மன் கிரியல்ல எம்.பி. இவ்வாறு வலியுறுத்தினார்.

” குதிரை ஓடிய பிறகு கடிவாளம் பூட்டுவதுபோலவே, சர்வக்கட்சி அரசுக்கான கோரிக்கையை அரசு விடுத்துள்ளது. தற்போது காலம் கடந்துவிட்டது. முன்கூட்டியே செய்திருக்க வேண்டியதொன்றை, காலம் கடந்த பின்னர் செயற்வதற்கு முற்படுகின்றனர்.” – எனவும் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.

” சர்வதேச சட்டத்திட்டங்களுக்கமைய செயற்பட வேண்டும் என ஆலோசனை வழங்கும் ஜனாதிபதி, தற்போது அதற்கு மாறாக செயற்படுகின்றார்.” – எனவும் அவர் கவலை வெளியிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...