கடந்த ஜூலை மாதம் 09 இடம்பெற்ற போராட்டத்தில் ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அங்கு பல பொருட்கள் திருட்டு போயுள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்போல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகையில் திரை அணிகலன்களாக பயன்படுத்தப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட 40 செப்பு உருண்டைகளை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட செப்பு உருண்டைகளை பழைய உலோகமாக விற்பனை செய்ய முற்பட்ட வேளை, இவர்கள் வெலிக்கடை பொலிஸாரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
28, 34 மற்றும் 37 வயதுடைய சந்தேகநபர்கள் ராஜபகிரிய ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் போதைக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த மூவரும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட பொலிஸ் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment