106983766 1638471355360 gettyimages 1355744075 coronaomicronvariante
இலங்கைசெய்திகள்

நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பு! – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Share

நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் பிரதான ஒருங்கிணைப்பு நிபுணர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வைத்தியர் அன்வர் ஹம்தானி,

மேல் மாகாணம் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முன்னர் கடைப்பிடித்த சுகாதார வழிமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டும்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை கடைப்பிடுத்தல், அவசியமற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்தல் மற்றும் ஒன்றுகூடல்களை கட்டுப்படுத்தல் போன்ற வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

தற்போது பரவிவரும் கொரோனா வைரஸானது ஒமிக்ரோன் வைரஸின் திரிபாக கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இருப்பினும், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை தொடர்ந்தும் கட்டுப்படுத்தக்கூடிய அளவிலே காணப்படுகிறது. மக்கள் சுகாதார வழிமுறைகள் முறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்க்க நீண்டும் – என தெரிவித்துள்ளார்.

#SriLankanews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...