அரசியல்
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முற்படுவது சட்ட விரோதம்! – ரணில் எச்சரிக்கை


” போராட்டம் என்ற போர்வையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முற்படுவதும், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பவற்றைக் கைப்பற்றுவதும் ஜனநாயகம் கிடையாது. அது சட்டவிரோத நடவடிக்கையாகும். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற ரணில் விக்கிரமசிங்க, நேற்றிரவு கங்காராமை விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
விகாரை வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களால் நடப்பு விவகாரங்கள் குறித்து ஜனாதிபதியிடம் கேள்விகள் எழுப்பட்டன. அவற்றுக்கு பதிலளிக்கையிலேயே அவ்வாறு கூறினார்.
” எல்லா சந்தர்ப்பங்களிலும் நான் ராஜபக்சக்களுக்கு எதிராகவே செயற்பட்டுள்ளேன். எனவே, அவர்கள் எப்படி எனது நண்பர்களாவார்கள்? நான் மக்களின் நண்பன்.” -எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.