அரசியல்
ஐ.ம.சக்தியின் இளைஞர் அணி தலைவர் இராஜினாமா!


ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து மயந்த திஸாநாயக்க இராஜினாமா செய்துள்ளார் என அறியமுடிகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், செயலாளர் ஆகியோருக்கு இராஜினாமா கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக மயந்த திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மயந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக நடைபெற்ற தேர்தலில் டலஸ் அழகப்பெரும் தோல்வியடைந்ததையடுத்து, ஐக்கிய மக்கள் சக்திக்குள் முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றது.