அரசியல்
தாய் நாட்டுக்காக முடிவெடுக்கும் மிகச் சிறந்த தருணம் இது! – சிந்தித்து செயற்படுங்கள் என்கிறார் பேராயர்


பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து செயற்படக் கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்வதற்காக மனசாட்சியுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர்,
அரசியல் அதிகார திட்டங்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குதல் போன்ற ஊழல் செயற்பாடுகளைத் தவிர்த்து, மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து செயற்படக் கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்வதற்காக மனசாட்சியுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இது ஒரு சிறந்த வரலாற்று சந்தர்ப்பம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கிறேன்.
அனைத்து நிறைவேற்று அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதி ஒருவர் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய அபூர்வ சூழ்நிலையில், தாய்நாட்டின் எதிர்காலத்திற்காக எடுக்கப்படும் அந்த மிக முக்கியமான தீர்மானத்திற்காக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காத்திருகின்றனர். – என்று தெரிவித்துள்ளார்.