எதிர்க்கட்சித் தலைவர் – போராட்டக்காரர்கள் சந்திப்பு
எந்த சந்தர்ப்பத்திலும் அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு துரோகம் இழைக்கமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மக்கள் போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் போராட்ட குழுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போதே, எதிர்கட்சித் தலைவர் தானோ அல்லது தனது கட்சியோ அல்லது தனது கூட்டணியோ ஒருபோதும் போராட்டத்தின் கோரிக்கைகளுக்கு துரோகம் செய்யவில்லை எனவும் எதிர்காலத்திலும் துரோகம் இழைக்கமாட்டோம் எனவும் போடட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews