அரசியல்
காலி முகத்திடல் போராட்ட குழு அரசியல் கட்சியாக பதிவு!


“மக்கள் போராட்ட பிரஜை’கள் என்ற பெயரில் புது புதிய அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்காக காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் இன்று (18) தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஆவணங்களை ஒப்படைத்துள்ளனர்.
சில குழுக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்த முயற்சி மேற்கொண்டாலும் மக்களின் அபிலாஷைகளுக்காக தொடர்ந்து முன் நிற்கப்போவதாக மேற்படி கட்சியின் செயலாளர் சாணக்க பண்டார தெரிவித்தார்.
எத்தனை சவால்கள் வந்தாலும் நாட்டின் அபிவிருத்திக்காகவும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.