அரசியல்
துரத்தும் வெளிநாடுகள்! – இலங்கை வருகிறார் கோட்டா


பதவியை இராஜினாமா செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அடுத்த மாதம் இலங்கை திரும்பவுள்ளார் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அடுத்து கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு தப்பிச்ச சென்றார். அங்கு அவருக்கு அடைக்கலம் வழங்க மறுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றடைந்தார்.
தற்போது சிங்கப்பூரில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்சவுக்கு சாதாரண நபருக்கு வழங்கப்படும் 15 நாட்களுக்கான விசாவே வழங்கப்பட்டுள்ளது எனவும், அவரை விரைவில் நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசு கோரிக்கை முன்வைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை வரும் கோட்டாபய , ஓய்வு பெற்றுள்ள ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை பெற்றுக்கொள்ள உள்ளார் என்றும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.