அரசியல்
நாடு முடக்கப்படும் அபாயம்!

நிலையான அரசை விரைவில் ஸ்தாபித்து – அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தாவிட்டால் நாடு முடக்கப்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
“ எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அந்நிய செலாவணி அவசியம். எனினும், அதனை திரட்டிக்கொள்வதற்கான உறுதியான ஏற்பாடு இல்லை. நிச்சயமற்ற தன்மையே காணப்படுகின்றது.
சர்வதேச உதவியை பெறுவதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வெற்றியளிப்பதற்கும் நிலையான அரசொன்று அவசியம்.” – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login