எவருக்கும் ஆதரவு இல்லை! – மைத்திரி அறிவிப்பு
ஜனாதிபதி பதவிக்காக ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் போட்டியிட்டால், தமது கட்சி எவருக்கும் வாக்களிக்காது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஜனாதிபதி பதவிக்கான தேர்வு இடம்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
#SriLankaNews