douglas devananda
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மக்களின் எதிர்பார்ப்புக்ளை நிறைவேற்றும் பயணம் தொடரும்!

Share

எமது மக்கள் எமக்கு வழங்குகின்ற ஆணையினை எமக்கான பலமாகக் கொண்டு, தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக தென்னிலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி எமது மக்களின் எதிர்பார்ப்புகளையும் அரசியல் அபிலாசைகளையும் வென்றெடுப்பதே எமது வழிமுறையாக இருக்கின்றது.

எனவே, தென்னிலங்கையில் ஏற்படுகின்ற அரசியல் குழப்பங்களும் – அரசியல் மாற்றங்களும், எமது மக்கள் நலச் செயற்பாடுகளில் எந்தவிதமான மாற்றத்தினையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதற்கயை தமது பயணமும் மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்களும் தொடர்ச்சியாக முன்னகர்ந்து கொண்டே இருக்கும் எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான உத்தியோகத்தர்களுக்கான விசேட சேவை இன்று(11.07.2022) ஆரம்பிக்கப்பிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களின் கோரிக்கைக்கமைய கிளிநொச்சிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

குறித்த கோரிக்கை, சம்மந்தப்பட்ட தரப்புக்களினால் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அதனை துறைசார்ந்த அமைச்சருடன் கலந்துரையாடி, இந்தச் சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தேன்.

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டங்களை சேர்ந்த பொது மக்களுக்கும் இந்தச் சேவை மிகவும் வரப்பிரசாதமாகும்.

இச்சேவையினை வவுனியா வரையில் விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர். அதுதொடர்பாக ஆராய்ந்து, சாத்தியமான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும்.

தற்போது புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பது போன்று, விரைவில் தமிழகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்கு கப்பல் சேவையும், பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையும் இடம்பெறும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....