FB IMG 1657508075186 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். -கிளிநொச்சி இடையே விசேட ரயில் சேவை இன்று ஆரம்பம்!!

Share

அரச பணியாளர்கள் மற்றும் அறிவியல்நகர் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு வசதியாக இச்சேவையை ரயில் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி யாழ்.ராணியின் ரயில் சேவை 6 காலை மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் ரயில் 6.40க்கு யாழ் புகையிரத நிலையத்திலிருந்தும், 7 மணிக்கு சாவகச்சேரியிலிருந்தும், 7.12க்கு கொடிகாமத்திலிருந்தும் புறப்பட்டு பளையை 7.30க்கும், கிளிநொச்சியை 7.56க்கும், அறிவியல்நகர் புகையிரதநிலையத்தை 8.05க்கும் வந்தடைந்து 8.11க்கு முறிகண்டியை அடையும்.

காங்கேசன்துறைக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையில், மாவிட்டபுரத்திலிருந்து 6.05க்கும், தெல்லிப்பழையிலிருந்து 6.09க்கும், மல்லாகத்திலிருந்து 6.14க்கும், சுன்னாகத்திலிருந்து 6.18, இணுவிலிருந்து 6.22க்கும், கோண்டாவிலிருந்து 6.27க்கும், கொக்குவிலிருந்து 6.31க்கும் புறப்பட்டு 6.35க்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும்.

யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் இடையே, புங்கன்குளம் 6.44, நாவற்குழி 6.50, தனங்கிளப்பு 6.54, சாவகச்சேரி 7.00, சங்கத்தானை 7.03, மீசாலை 7.07, கொடிகாமம் 7.12, மிருசுவில் 7.14, எழுதுமட்டுவாழ் 7.21க்கு புறப்பட்டு பளையை 7.30க்கு வந்தடையும். அங்கிருந்து ஆனையிறவு 7.42, பரந்தன் 7.50க்கு வந்தடைந்து கிளிநொச்சிக்கு 7.56க்கு வந்தடையும்.

இந்த மீண்டும், காலை 10 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் பளையிலிருந்து 10.31க்கும், கொடிகாமத்திலிருந்து 10.48க்கும், சாவகச்சேரியிலிருந்து 11 மணிக்கும் புறப்பட்டு 11.20க்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.

பிற்பகல் 2 மணிக்கு மறுபடியும் காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் இந்தப் ரயில், யாழ்ப்பாணத்திலிருந்து 2.39க்கும், சாவகச்சேரியிலிருந்து 2.59க்கும், கொடிகாமத்திலிருந்து 3.11க்கும் புறப்பட்டு, பளையை 3.38க்கும், கிளிநொச்சியை 3.56க்கும் வந்தடைந்து, முறிகண்டியை 4.10க்கு வந்தடையும்.

மீண்டும் முறிகண்டியிலிருந்து 4.40க்கு புறப்படும் இந்தப் புகையிரதம் அறிவியல்நகரை 4.46க்கு வந்தடைந்து, கிளிநொச்சியிலிருந்து 5 மணிக்கு புறப்பட்டு, பரந்தனிலிருந்து 5.06க்கும், ஆனையிறவிலிருந்து 5.14க்கும் பளையிலிருந்து 5.30க்கும் புறப்பட்டு 6.44க்கு யாழ்ப்பாணம் வந்தடைந்து 7.20க்கு காங்கேசன்துறையை சென்றடையும்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஒரு வழிக் கட்டணமாக 90 ரூபாய் கட்டணமும் யாழ்ப்பாணத்திலிருந்து பளைக்கு 60 ரூபாயும் யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமத்துக்கு 35 ரூபாயும் கட்டணம் அறவிடப்படும்.

FB IMG 1657508079419 IMG 20220711 WA0006 FB IMG 1657508077126 FB IMG 1657508072888

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...