இலங்கை
1,500 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு!


இந்த வருடத்தின் கடந்த 6 மாத காலப்பகுதியில் இலங்கையில் இருந்து சுமார் 1,500 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில்,
இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் இலங்கை மருத்துவ சபையினால் “நல்ல நிலைப்பாட்டிற்கான சான்றிதழ்” (Certificate of Good Standing) பெறுவதற்காக 1,486 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கடந்த 6 மாதங்களில் சான்றிதழுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு, ஜனவரி -138, பெப்ரவரி- 172, மார்ச்- 198, ஏப்ரல்- 214, மே- 315, ஜூன்-449ஆக பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.