Wijeyadasa Rajapakshe
அரசியல்இலங்கைசெய்திகள்

19 ஐ விடவும் 22 இல் சிறப்பான ஏற்பாடுகள்!

Share

அரசியலமைப்பிற்கான 22ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 19 ஐ விடவும் 22 இல் சிறப்பான ஏற்பாடுகள் உள்ளன – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

19 ஐ அடியொட்டியதாக 21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்டாலும், அது அவ்வாறு அமையவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் சபையில் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

“அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பாதுகாப்பு, சுற்றாடல் மற்றும் மஹாவலி என மூன்று அமைச்சுகளை ஜனாதிபதி வகிக்க ஏற்பாடு இருந்தது. ஆனால் 22 இல் பாதுகாப்பு அமைச்சு பதவியை மட்டுமே ஜனாதிபதி வகிக்க முடியும். அதையும் நீக்குவதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல நேரிடும்.” – எனவும் நீதி அமைச்சர் விளக்கமளித்தார்.

மத்திய வங்கி ஆளுநர் நியமனத்தைக்கூட, அரசியலமைப்பு பேரவையே வழங்க வேண்டும், அமைச்சர் நீக்கப்பட்டாலும், அமைச்சின் செயலாளர் தொடர்ந்தும் செயற்படலாம், இப்படி பல சிறப்பான ஏற்பாடுகள் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.

எனினும், மகாநாயக்க தேரர்களைக்கூட ஏமாற்றும் வகையிலேயே 22 முன்வைக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...