Connect with us

இலங்கை

பாதாள கோஷ்டிக்கு முடிவுகட்ட கூட்டு நடவடிக்கை!

Published

on

download 4

பாதாள கோஷ்டியின் செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், அதனை ஒடுக்குவதற்கான நடவடிக்கையை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு துரிதப்படுத்தியுள்ளது.

இதற்கான நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு மேலதிமாக முப்படையினரும் இணைக்கப்படவுள்ளனர் என தெரியவருகின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில், பாதாள கோஷ்டியின் செயற்பாடுகளும் தலைதூக்கியுள்ளது. இதனால் கொலை கலாசாரமும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாத காலத்துக்குள் 10 பேர்வரை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே பாதாள கோஷ்டியை ஒடுக்குவதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews