VideoCapture 20220630 174720
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிபொருள் நெருக்கடி! – திண்மக்கழிவு அகற்றலிலும் நெருக்கடி

Share

எரிபொருள் நெருக்கடி காரணமாக யாழ் மாநகர சபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களுக்கு அவசர கோரிக்கையொன்றையும் யாழ். மாநகர சபை சுகாதார குழு தலைவர் வ.பார்த்தீபன் விடுத்துள்ளார்.

திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது மக்களை பாதிக்கின்ற அளவிற்கு யாழ்ப்பாண மாநகர சபையினுடைய செயற்பாடுகளையும் பாதித்திருக்கின்றது. இதனால யாழ். மாநகரசபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிய திண்மக் கழிவகற்றல் பொறிமுறை உருவாக்கப்பட்டது. இதற்கமைய யாழ் மாநகரசபைக்கு உட்படட 27 வட்டாரங்களுக்கும் ஒரு உழவு இயந்திரம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு கழிவகற்றப்பட்ட போதும், தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினால் 9 உழவு இயந்திரங்களே திண்மக் கழிவகற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

இது இடர்கால கழிவகற்றல் முகாமைத்துவத்தினை உருவாக்கியுள்ளது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஒரு வீட்டிற்கு செல்லவேண்டும் என்கிற மாநகர முதல்வரின் கோரிக்கைக்கேற்ப புதிய நேர அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடியால் திண்மக் கழிவகற்றலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

கழிவுகளை அகற்ற முடியாத நேரங்களில் யாழ் மாநகர சபைக்குட்பட்ட 9 இடங்களில் மக்கள் கழிவுகளை தரம் பிரித்துக் கொண்டு ஒப்படைக்கின்ற இடங்களாக பிரகடனப்படுத்தி இருக்கின்றோம். ஏதோவொரு வகையில் தங்களுக்கு அருகில் உள்ள இதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் கழிவுகளை கொடுக்கமுடியும்.

இதனை சில நாட்களில் பத்திரிகை வாயிலாக பகிரங்கப்படுத்துவோம். காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செயற்ப்படுத்தப்படவுள்ளது. எனவே இந்த இடர்கால கழிவகற்றல் முகாமைத்துவதற்காக மக்கள் பூரண ஒத்துழைப்பினை தர வேண்டும். அத்துடன் இயலுமான அளவிற்கு கழிவுகளை குறையுங்கள்.

எமது ஊழியர்கள் ”பணம் தந்தால் தான் கழிவகற்றுவோம்” என அழுத்தம் கொடுத்தால் அதனை யாழ்.மாநகரசபைக்கு அறிவித்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அவ்வாறு பணம் வாங்கியவர்களுக்கு எதிராக விசாரணை நடாத்தப்பட்டு தண்டிக்கப்படுவர் என்றார்.
0716390000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பொதுமக்கள் தொடர்பு கொண்டு இவை தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...

rain
செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...