LOADING...

ஆனி 28, 2022

பலாலி விமான நிலைய சேவைகள் விரைவில் ஆரம்பம்! – அமைச்சரவை அனுமதி

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அடிப்படை சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகள் 2019 நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும், கொவிட் தொற்று நிலைமையால் அதன் நடவடிக்கைகள் 2020 மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாகப் பிற்போடப்பட்டுள்ளது.

அவ்விமான நிலையத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையம் வரைக்கும் வாடகை விமானத் தொழிற்பாடுகள் மற்றும் நேர அட்டவணைக்கமைவான விமானப் பயணங்களை மேற்கொள்வதற்காக சர்வதேச ரீதியாகவும் உள்ளுரிலும் நிறுவப்பட்டுள்ள விமானக் கம்பனிகள் தற்போது வேண்டுகோள்களைச் சமர்ப்பித்துள்ளன.

அதற்கமைய, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகளை 2022 யூலை மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பித்தல் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Prev Post

ஹனிமூன் முடிந்த அடுத்த நாளே படப்பிடிப்பு சென்ற நயன்தாரா! எங்கே தெரியுமா?

Next Post

960 மணி நேரமே என் இலக்கு! – முடியாவிடில் பதவி துறப்பேன் என்கிறார் தம்மிக்க

post-bars

Leave a Comment