இலங்கை
நீதி அமைச்சர் யாழுக்கு விஜயம்!
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தார்.
இன்று காலை 12 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்த அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
இந்து பௌத்த கலாசார பேரவையின் பொதுச் செயலாளர் எம்.டி.எஸ்.இராமச்சந்திரனின் அழைப்பையேற்று இந்து பௌத்த கலாசார பேரவையில் இரண்டாம் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்கு பிரதம அதிதியாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் சில தினங்களுக்கு அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடல் - tamilnaadi.com