21 61ab7a7969ca1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கேலிக்கூத்தாகும் காலிமுகத்திடல் போடட்டக்களம்! – வீரவன்ஸ குற்றச்சாட்டு

Share

காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பத்தில் நியாயமான மக்கள் போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது தற்போது பைத்தியகாரத்தனமான, போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் மோசடியாளர்களின் கூட்டாக மாறியுள்ளது என்று விமல் வீரவன்ச எம் பி. சபையில் நேற்று கடுமையாக சாடினார்

நாட்டை அராஜக நிலைமைக்கு மாற்ற பைத்தியகாரர்கள் போன்று செயற்படும் போராட்டம் தொடர்பில் ஏன் இன்னும் பொறுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? எனவும் அவர் சபையில் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று விஷேட கூற்றுஒன்றை முன்வைத்து உரையாற்றிய அவர், அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:

இயற்கை பசளை பயிர் செய்கை போன்ற சிறந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட காலிமுகத் திடல் போராட்டம் தற்போது இரசாயன பயிர் செய்கைக்கு ஏற்பட்ட நிலைமை போல் மாறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் இலங்கைக்கு வந்திருந்த போது, அவர்களின் நடவடிக்கைகளுக்கு காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் தடையேற்படுத்தினர்.

நாடு ஸ்திரமற்ற நிலைமையில் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தி நாணய நிதியத்திடம் உதவி பெற்றுக்கொள்வதை தடுப்பதே போராட்டகாரர்களின் நோக்கம்.போராட்டகாரர்கள் நாட்டை அராஜக நிலைமைக்கு மாற்ற பைத்தியகாரர்கள் போன்று செயற்படும் போது ஏன் இன்னும் பொறுத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என வினவினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
31 8
இலங்கைசெய்திகள்

மீண்டும் பேருந்துகளில் இருந்து நீக்கப்படவுள்ள அலங்கார பொருட்கள்..!

வீதி விபத்துகளைக் குறைத்து, நெறிப்படுத்தப்பட்ட போக்குவரத்து முறையை நிறுவும் நோக்கில் ஜூலை 1ஆம் திகதி முதல்...

32 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் புதிய கோவிட் திரிபு பரவுமா..! சுகாதார அமைச்சு விளக்கம்

இலங்கையில் புதிய கோவிட் – 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும்...

30 8
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவி நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து...

29 9
இலங்கைசெய்திகள்

ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2...