அரசியல்
அத்துகோரள கொலை! – சாணக்கியன் ஏற்கின்றாரா?


“நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொல்லப்பட்ட சம்பவத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அனுமதிக்கின்றாரா?”
இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பியதுடன், சாணக்கியனின் செயற்பாடுகளுக்கு கடும் கண்டனத்தையும் வெளியிட்டார்.
” அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் உட்பட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்ததாலேயே, அரசியல்வாதிகளின் வீடுகள் எரியூட்டப்பட்டன.” என்று மே 20 ஆம் திகதி சாணக்கியன் உரையாற்றியுள்ளார்.
வன்முறையை நியாயப்படுத்தும் வகையில் அவர் உரையாற்றிய விதம், ஏற்புடையது அல்ல எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அடுத்த நாடாளுமன்ற அமர்வு முடிவடைவதற்குள், சாணக்கியன் தமது கருத்து தொடர்பில் கவலை வெளியிட்டு, தமது கருத்தை மீளப்பெற வேண்டும். இல்லையேல், அது தொடர்பில் சபாநாயகர் விசாரணை நடத்த வேண்டும்.” எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
You must be logged in to post a comment Login