இலங்கை
உலக வளை பாத தினத்தையொட்டி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு!


உலக வளை பாத தினத்தையொட்டி பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு யாழ் போதனா வைத்தியசாலையில் எலும்பியல் சத்திரசிகிச்சை நிலையத்தில் 03.06.2022. அன்று humanity &inclusion நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரும் எலும்பியல் சத்திரசிகிச்சை நிபுணர்களான தயாசிவம் கோபிசங்கர், பரமலிங்கம் ஸ்ரீகிருஷ்ணா ஆகியோரும் குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர் அருள்மொழி, மாகாண திட்டமிடல் வைத்திய அதிகாரி குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டு பிறவி வளை பாதம் தொடர்பான தமது அனுபவங்களையும் விழிப்புணர்வு கருத்துக்களையும் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
குழந்தைகளுக்கான சிகிச்சை முறை பற்றியும் சிகிச்சையின்போது ஏற்படும் சவால்கள் பற்றியும் எலும்பியல் சத்திரசிகிச்சை நிபுணர்களான தயாசிவம் கோபிசங்கர், பரமலிங்கம் ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் பிறவி வளை பாதமானது ஆரம்பத்திலேயே இனங்கண்டு சரியான முறையில் தொடர்ச்சியான சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றாக குணமாக்கக் கூடியது எனவும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைமுறை தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் வழங்கப்படுகின்றது எனவும் இது யாழ் மக்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் எனவும் கூறினர்.
முக்கிய நிகழ்வாக குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.அதில் பங்களித்த பங்குபற்றிய அனைவருக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டது அனைவருக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டது.
வளை பாதம் சிகிச்சை முறை மூலம் குணமடைந்த சிறுவர்களில் பெற்றோர்கள் இறுதியாக தமது அனுபவத்தினை தற்போது சிகிச்சை பெறும் குழந்தைகள் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.இதன்போது அவர்கள் எலும்பியல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment Login