அரசியல்
கோட்டா பதவி விலகுவதால் தீர்வு கிடைக்காது! – நாமல் தெரிவிப்பு


ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகுவதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாது என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகியமை துரதிஷ்டவசமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னோடியான கலந்துரையாடல் மேற்கொண்டு புரிந்துணர்வை ஏற்படுத்தி முன்னேறுவதே நாட்டை முன்னோக்கிச் செல்ல ஒரே வழி.
அனைவரையும் ஒன்றிணைத்து இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் பணியாற்றுவது மிகவும் அவசியம்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பதவியில் இருப்பவர்களை பதவி விலகுமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பதவி விலகல் மூலம் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாது.
நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பேன்” – என்றார்.
You must be logged in to post a comment Login