அரசியல்
திலீப் வெதஆராச்சியின் மகன் வெளிநாடு தப்பியோட்டம்!
இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டுவரும் சந்தேக நபரான, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் மகன் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அவர் படகுமூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என கூறப்படுகின்றது.
“பொலிஸாரே , நான் அவுஸ்திரேலியா வந்துள்ளேன்.இப்போது என்ன செய்வது ?” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் படத்துடன் பதிவிட்டுள்ளார்.
பொலிஸாரினால் தேடப்படும் ஒருவர் பொலிஸாருக்கு சவால் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திலீப் வெதஆராச்சியின் மகனான உதிந்து வெதஆராய்ச்சியும், அவரின் மனையும் பொலிஸாருக்கு அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தனர். தகாத வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
You must be logged in to post a comment Login