அரசியல்
கொடிகாமம் இராணுவ முகாமுக்கு காணி அளவீடு – எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டது!!!


கொடிகாமம் மத்தியில் தனியாருக்கு சொந்தமான துயிலுமில்ல காணி இராணுவ முகாமுக்கு காணி அளவிடப்பட்ட நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மக்களின் எதிர்ப்பையடுத்து அளவீடு கைவிடப்பட்டது.
15து கஜபாகு படைப் பிரிவிற்க்கே காணி அளவீடுசெய்யப்பட்டுள்ளது. 10 .5 பரப்பு தனியாருக்குச் சொந்தமான துயிலுமில்ல காணியே இவ்வாறு அளவிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.