இலங்கைசெய்திகள்

கோதுமை மா விலை உயர்வு! – பேக்கரி உற்பத்திகள் நிறுத்தப்படும் என எச்சரிக்கை.

white bakers flour 5kg
Share

” கோதுமை மா விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த வாரம் முதல் சகல பேக்கரிகளும் உணவு உற்பத்திகளும் நிறுத்தப்படும்.”

இவ்வாறு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பேக்கரி உணவு உற்பத்திகளுக்கான சகல மூலப்பொருட்களின் விலைகள் பெருமளவு அதிகரித்துள்ளதால் சிறு மற்றும் மத்தியதர பாண் உற்பத்தி பேக்கரிகள் தமது உற்பத்திகளை முழுமையாக நிறுத்திவிட்டன.

4 ஆயிரம் ரூபாவுக்கும் குறைந்த விலையில் விற்கப்பட்ட கோதுமை மா மூடையொன்றின் விலை தற்போது 12 ஆயிரம் ரூபாவாகவும் 37.5 எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 20 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது எனவும் ஜெயவர்தன சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் கோதுமை மா தேவையில் 30 சதவீதத்தை விநியோகிக்கும் நிறுவனம் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 35 ரூபாவால் அதிகரித்துள்ளது.

எனவே கோதுமை மாவின் விலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

#SriLankanNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...