அரசியல்
அரச உத்தியோகத்தர்களுக்கு பிரதமர் விசேட அறிவிப்பு!


அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களைத் தவிர, ஏனைய அரச ஊழியர்கள் நாளைய (20) தினம் பணிக்கு வரவேண்டியதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன், அத்தியாவசியமற்ற பயணங்களை நாளை தவிர்த்துக்கொள்ளுமாறு, மக்களிடமும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும், எனவே, சாதாரண தரப்பரிட்சைக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.