” அடுத்த இரு நாட்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாது. எனவே, பெற்றோலை பெறுவதற்கு வரிசையில் நிற்கவேண்டாம்.” – என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று கோரிக்கைவிடுத்தார்.
அத்துடன், இன்று சமையல் எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது, எனவே, சமையல் எரிவாயுவை பெறுவதற்கும் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அவர் கோரினார். சமையல் எரிவாயு நாளை முதல் விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
எனினும், வழமைபோல டீசல் விநியோகிக்கப்படுகின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டு நிலை நீங்க இன்னும் 20 நாட்கள்வரை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment