அரசியல்
இனப்படுகொலை வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் பருத்தித்துறை முனையில்


முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை கடற்கரையில் இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலமையில் இடம்பெற்றது.
பிற்பகல் 4:00 மணிக்கு உயிர்நீத்தோருக்காக இரு நிமிட அக வணக்கத்துடன் இடம் பெற்ற நிகழ்வில் பொது ஈகை சுடரினை முன்னாள் போராளி ஜெயராச் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து சுடர்களை பருத்தித்துறை நகர சபை தலைவர் யோ.இருதயராசா, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா.அரியகுமார், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான சி.தியாகலிங்கம், சி.பிரசாத், காந்தன், கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் ப.நிலாங்கதன், பருத்தித்துறை மூலக்கிளை உறுப்பினர் திரு.சாமியப்பா, பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் திரு.நவரத்தினம், மற்றும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இதேவேளை குறித்த பகுதியில், பருத்தித்துறை பொலிஸார் பாதுகாப்பு கடமையில் அதிகளவில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.