குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை ஞாயிற்றுக்கிழமை (15) அனுஷ்டிக்கப்படவுள்ளது.
குமுதினிப் படகுப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்காக காலை 7.45 மணிக்கு நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுவதுடன் மரநடுகையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் நெடுந்தீவு இறங்கு துறையில் அமைந்துள்ள குமுதினி படகுப் படுகொலை நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களிற்கு நினைவஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் பயணித்த குமுதினி படகு பயணித்துக் கொண்டிருந்த வேளை இலங்கை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment