இலங்கைக்கு மருத்துவ உதவிகளை இந்தியா அனுப்ப முடிவு செய்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மருந்துகள் மற்றும் மருத்துவ தளபாடங்கள் இல்லாமல் வைத்தியசாலைகள் முடங்கி கிடக்கின்றன. எனவே, இலங்கைக்கு மருத்துவ தளபாடங்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இதை இலங்கையின் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன உறுதி செய்துள்ளார். 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ தளபாடங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று, இந்திய கடற்படை கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது என்றும், இது எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதைப்போல, 34 கோடி இலங்கை ரூபா மதிப்பிலான அத்தியாவசிய மருந்துகளை, இந்தோனேஷியாவும் அனுப்பவுள்ளது என்றும், அது ஒரு வாரத்துக்குள் இலங்கையை வந்தடையும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
#SriLanka&IndianNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment