இலங்கை
வான் பாயும் கனகாம்பிகை குளம்! – அவதானமாக இருக்குமாறு மக்களிடம் வேண்டுகோள்


கனகாம்பிகை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளமையால் இரத்தினபுரம், ஆனந்தபுரம் பகுதிகளில் வாழுகின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், தற்போது பெய்து வருகின்ற கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 35 அடி 5 அங்குலமாக அதிகரித்துள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் இரணைமடு குளத்தின் நீர்வரத்தை கருத்திற்கொண்டு, குளத்தின் வான்கதவுகள் திறப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன.
எனவே, இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் – என கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.