தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொருட் கொள்வனவில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
வழமையாக சித்திரை வருட புத்தாண்டுக்கு முதல் நாள் யாழ் நகரப்பகுதியில் பெருந்திரளான மக்கள் தமக்கு தேவையான உடுபுடைவைகள், நகை,மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்யும் நிலையில். இம்முறை நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறதன் காரணமாக யாழ்.நகர் பகுதி சோபையிழந்து காணப்படுகிறது.
அதேவேளை ஆடம்பர பொருட்கள் உடு புடவைகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கான பொருட் கொள்வனவில் ஆர்வம் காட்டவில்லை.
அதேநேரம் யாழில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் , டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றை கொள்வனவு செய்வதற்கு பெருமளவானோர் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
#SriLankaNews
Leave a comment