அரசியல்
விலகிச் சென்ற பங்காளிகளை சந்திக்கிறார் ஜனாதிபதி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள 40 உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த தகவலை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” 11 கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பினோம். இடைக்கால அரசை அமைக்குமாறு யோசனை முன்வைத்தோம். 20 ஐ நீக்கிவிட்டு திருத்தங்கள் சகிதம் 19 ஐ முன்வைக்குமாறு வலியுறுத்தினோம். இவை தொடர்பில் கலந்துரையாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.” – என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login