விபத்து
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழிலிருந்து சுற்றுலா சென்ற வான் விபத்து! – ஒருவர் பலி; இருவர் படுகாயம்

Share

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குச் சுற்றுலா சென்ற வான், கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கிளபென்பேர்க் பகுதியில் நேற்றுப் பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து கிண்ணியா நோக்கிப் பயணித்த கனரக வாகனமும் கிண்ணியா பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி யாழ்ப்பாணத்திலிருந்து சென்றுகொண்டிருந்த வாகனமுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ரத்னகலாவதி (வயது 72) என்பவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...