IMG 20220409 WA0021
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

‘மே -18’ முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஒன்றிணையுங்கள்! – கஜேந்திரன் அழைப்பு

Share

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க ஒன்றிணையுங்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் மீது இடம்பெற்றது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு. அந்த இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்ற நோக்கத்திற்காகவும் மே-18 நினைவேந்தல் நிகழ்வானது உணர்வுபூர்வமாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

அரச பயங்கரவாதத்தால் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்புப் போராட்டத்தில் லட்சக்கணக்காண மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதோடு யுத்தம் மௌனித்த 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் வரை ஜந்து லட்சம் மக்கள் வரை சென்றிருந்தார்கள்.

இவ்வாறான நிலையில் தான் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் தமிழ் மக்களால் நினைவு கூரப்படுகின்றது. என்ன நோக்கத்துக்காக மக்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்தார்களோ அந்த நோக்கங்களை அடைவதற்காக ஒன்றிணைந்து நினைவுகூரக்கூடிய ஒரு நாளாக காணப்படுகின்றது.

எனவே உயிரிழந்த எமது மக்களை உறவுகளை கூட்டாக நினைவுகூர வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது அந்த உறவுகள் கடைசி வரை எந்த இலட்சியத்துக்காக உறுதியாக இருந்தார்களோ அந்த இலட்சியத்திற்காக செயற்பட வேண்டிய கடப்பாடும் எங்களுக்கு காணப்படுகின்றது.

எனவே இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும். அந்த நீதியானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக பெறப்பட வேண்டும். அத்தோடு இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமாக இருந்தால் ஒற்றையாட்சி மற்றும் 13வது திருத்தச்சட்டத்தை நிராகரித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். எனவே எமது எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுத்த முன்வாருங்கள் எனவும் தெரிவித்தார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு நகர் பகுதியில் இடம்பெற உள்ளது. இந்த கலந்துரையாடலில் இந்த கொள்கையுடன் ஏற்ற அனைத்து சிவில் சமூக தரப்பினரும் பங்கேற்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2b35ae96f8
இலங்கைசெய்திகள்

இந்திய விசா, கடவுச்சீட்டு சேவைகள் இனி நேரடியாக! – நவம்பர் 3 முதல் உயர்ஸ்தானிகராலயங்கள் மூலம் சேவை

எதிர்வரும் 03ஆம் திகதி முதல் இந்தியாவிற்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் இந்திய...

25 6903096ee28d6
உலகம்செய்திகள்

அணு ஆயுத சோதனை களத்தில் அமெரிக்கா: ட்ரம்பின் அதிரடி முடிவு உலகிற்கு எச்சரிக்கை

அமெரிக்க அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குமாறு அநாட்டு இராணுவத் தலைவர்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

images 4 3
இலங்கைசெய்திகள்

கடலில் மிதந்துவந்த திரவம் 2 மீனவர்கள் உயிரிழப்பு

கடலில் மிதந்து வந்த ஒரு போத்தலில் (புட்டியில்) இருந்த திரவத்தை அருந்திய நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த...

25 6902f64dd2465
இலங்கைசெய்திகள்

அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பு: பொலிஸ் தீவிர விசாரணை

  இலங்கையின் மட்டக்குளி மற்றும் பமுனுகம காவல் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத...