அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபய தலைமையிலான அரசு விரைவில் கவிழும்! – இராதாகிருஷ்ணன்

Share
WhatsApp Image 2022 04 07 at 3.31.18 PM
Share

மக்கள் எழுச்சியால் சர்வாதிகாரிகளின் சாம்ராஜ்ஜங்கள்கூட சரிந்துள்ளன. கால சக்கரம் என்பது அநீதி இழைப்பவர்களுக்கு கருணை காட்டாது. தற்போது இலங்கை மக்களும் கொதித்தெழுந்துள்ளனர். எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரைவில் கவிழும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. சூளுரைத்தார்.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் தலவாக்கலையில் இன்று (07.04.2022) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மக்கள் சக்திக்கு முன் அரசியல் சக்தியால் துணிந்து நிற்க முடியாது. நிச்சயம் மண்டியிட்டாக வேண்டும். இதுவே வரலாறு எமக்கு கற்று தந்துள்ள பாடம். சர்வாதிகாரிகளான சதாம் உசைன், முகாகே போன்றவர்களின் சாம்ராஜ்ஜங்கள்கூட மக்கள் எழுச்சியால் சரிந்தன. அதேபோல அநீதிகள் தலைவிரித்தாடும்போது கால சக்கரமும் கைகட்டி வேடிக்கை பார்க்காது, அது தனக்கே உரிய பாணியில் வேலையை காட்டிவிடும்.

அந்தவகையில் ராஜபக்சக்களை தலையில் தூக்கி வைத்து ஆனந்த கூத்தாடியவர்கள்கூட , ராஜபக்சக்கள் வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்தி பொங்கியெழுந்து போராடுகின்றனர். எமது மக்களும் வீதிக்கு இறங்கிவிட்டனர். இதனை நாம் நாட்டை மீட்பதற்கான சுதந்திர போராட்டமாகவே கருதுகின்றோம். எனவே, இன, மத, பேதமின்றி அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து தற்போதுபோலவே தொடர்ந்தும் போராட வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
2 14
இலங்கைசெய்திகள்

இதுவரையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் கட்சிகள் விபரம்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று...

2 16
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சி ஆதிக்கம்! யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர...

2 16
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அமோக வெற்றி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச...

2 15
இலங்கைசெய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் பெரும் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...