ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு செல்லும் வழியில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் குழுவொன்றே செயற்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையிலும் அரசு வசந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
” இரும்புக் கட்டைகள், பொல்லுகள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல், ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டிவிட்டு மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் திட்டமிட்ட அடிப்படைவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நாட்டில் அரபுக் காடுகளை உருவாக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
சமூக ஊடகங்களை அநாமதேயமாகப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டைச் சீர்குலைக்கும் நோக்கில் இந்தக் கலவரம் நடத்தப்பட்டுள்ளது என கைது செய்யப்பட்டவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் ” – என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட நகர்வே ‘அரபு வசந்தம்’ என விளிக்கப்படுகின்றது.
#SriLankaNews
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
 
 
Leave a comment