பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி, கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
தந்தையை இழந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வளர்ந்த, குறித்த முல்லை யுவதி சாதனை படைத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் இருந்து குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று (18) பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற 25 வயதிற்குட்பட்ட 50-55 கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இதன்மூலம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும், நாட்டிற்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ள முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment